உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உப்பளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரி ஊராட்சியில் உள்ள ஆனைகுடி அருகே உள்ள இடத்தில் உப்பளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.களரி, பள்ளமோர்க்குளம் உள்ளிட்ட ஊராட்சியில் உட்பட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் ஆனைகுடி கண்மாய் தண்ணீரே நம்பி உள்ளது. விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய பகுதியில் உப்பளம் அமைப்பதால் விவசாய நிலம் பாதிப்பை சந்திக்கின்றது. நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.இந்நிலையில் ஆனைகுடி கண்மாய் நீர்வரத்து பகுதியில் தனியார் நிறுவனம் உப்பளம் ஒன்றை துவக்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளால் மூடியது. அதனை விலைக்கு வாங்கிய துாத்துக்குடி சேர்ந்த தனியார் நிறுவனம் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அழித்து உப்பளம் செய்யும் பணியை துவக்கி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழல் நிலவுகிறது. இப்பகுதியில் உப்பள பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்றனர். அப்பகுதி சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் உப்பள பகுதியை முற்றுகையிட்டனர். உத்தரகோசமங்கை போலீசார் உப்பளம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து களரி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ