உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கடலாடியில் தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

சாயல்குடி : -தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கடலாடி தாலுகா மாநாடு சாயல்குடியில் நடந்தது. இதில், தடுப்பணைகளை சீரமைத்து நீர் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி வரவேற்றார். தாலுகா சங்க பொருளாளர் முத்துராஜா, விவசாயிகள் சங்க நிர்வாகி செல்வராஜ், முருகேசன்,பொருளாளர் செவல்பட்டி அந்தோணிசாமி பங்கேற்றனர்.இதில், 60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6000 பென்ஷன் தர வேண்டும். சாயல்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள காவலர் குடியிருப்பை உடனடியாக அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளை அமைக்க வேண்டும். கடலாடி தாலுகாவில் நெல், மிளகாய் பயிர்களுக்கு வெள்ளத்தால் பாதித்த காரணத்தால் இன்சூரன்ஸ் உடனடியாக வழங்க வேண்டும், தரைக்குடி செவல்பட்டி கால்வாய் துார்வார வேண்டும். தடுப்பணைகளை சீரமைத்து நீர் செல்ல வழி ஏற்படுத்தித் தர உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நாகராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை