உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே ஆவியூர் கல்குவாரி விபத்துக்கு காரணம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு 

அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே ஆவியூர் கல்குவாரி விபத்துக்கு காரணம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு 

ராமநாதபுரம்: விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது தற்செயலாக நடந்தது இல்லை. அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைப் பொது செயலாளர் நேதாஜி தெரிவித்தார்.அவர் கூறியிருப்பதாவது: தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் சார்பில் 2023 டிச.28ல்டி.ஜி.பி., அலுவலகத்திலும், இயற்கை வளங்கள் துறை கூடுதல் செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டுவரும் வெடி மருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும். இவை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கினால் பெரும் பாதிப்பு ஏற்படும். சமூக சீரழிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கல்குவாரிகளில் சட்ட விரோத செயல்பாடுகளுக்குமூலப்பொருளாக இருப்பது வெடிமருந்து தான். வெடி மருந்துகள் பயன்படுத்துவதை கண்காணித்துகட்டுப்படுத்த வேண்டும்.சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமான வெடி மருந்துகள் கிடைப்பதைதடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கல்குவாரிகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் வெறும் நிவாரணம் என்ற இடத்தில் மட்டும்நின்று பிரச்னைகளை மூடி மறைக்கப் பார்க்கிறது. ஆக்கப்பூர்வமாக பிரச்னை தீர்வதற்கானசெயல் திட்டத்தை வடிவமைத்திருக்க வேண்டும். நாம் மனு அளித்து உரிய தகவல்களை தெரிவித்த பிறகும் முறையாக குழு அமைத்து சட்ட விரோத வெடிமருந்து நடமாட்டத்தை அனைத்துமாவட்டங்களிலும் கட்டுப்படுத்த தவறிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ