உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

கோடை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் சாகுபடிக்கு கண்மாயில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயால் பாசனம் பெறும் விவசாய நிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடை சாகுபடியாக சில ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக இருதயபுரம், புலி வீரத்தேவன் கோட்டை, பொட்டக்கோட்டை, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி தற்போது மகசூல் நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், நெல் வயலில் ஈரப்பதம் இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை விவசாயிகள் ஆயில் மோட்டார் வைத்து நெல் வயல்களுக்கு பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளதால் பாய்ச்சப்படும் தண்ணீரால் முழுமையான கோடை நெல் மகசூல் பெற முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை