முதுகுளத்துாரில் வயல் தின விழா
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே முத்துவிஜயபுரம் கிராமத்தில் வயல் தின விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன் தலைமை வகித்தார். வட்டார உதவி இயக்குனர் கேசவராமன் முன்னிலை வகித்தார். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நெல் ரகங்கள் பற்றியும், பெரும்பாலும் மழையை நம்பி சாகுபடி செய்யப்படுவதால் குறைந்த வயதில் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் பேரையூர் நம்மாழ்வார் வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெற்பயிரில் விதைப்பு முதல் அறுவடை வரை பல்வேறு வளர்ச்சி நிலைகளில் கடைபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள், உரம், பூச்சி மருந்துகள் பயன்பாடு குறித்து விளக்கினர்.கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.