உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொய் தகவலால் தீயணைப்பு வீரர்கள் அலைக்கழிப்பு 

பொய் தகவலால் தீயணைப்பு வீரர்கள் அலைக்கழிப்பு 

திருவாடானை: திருவாடானை தீயணைப்புநிலையத்திற்கு இரவு நேரத்தில் சிலர் பொய்யான தகவல்களை கூறி அலைக்கழிக்கின்றனர்.பொதுமக்களுக்கு தீயணைப்புதுறை சேவை முக்கியமானது. எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களுக்கு தகவல் தெரிவித்தவுடன் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். உண்மை சம்பவங்களை மட்டுமே அழைக்க வேண்டும். பொய்யான தகவல்களை கூறி அலைக்கழிக்க கூடாது. நேற்று முன்தினம் இரவு திருவாடானை அருகே 20 கி.மீ. துாரத்தில் உள்ள அரியப்புவயல் கிராமத்தில் வைக்கோல் படப்பில் தீ பிடித்து எரிவதாக சென்னை தீ கட்டுபாட்டு அலுவலகத்திற்கு ஒருவர் தகவல் தெரிவித்தார்.அங்கிருந்து திருவாடானை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. வீரர்கள் வாகனம் மூலம் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு வைக்கோல் படப்பு எரிந்தற்கான சம்பவம் இல்லை. தகவல் தெரிவித்தவரின் அலைபேசியை தொடர்பு கொண்ட போது, பொய்யான தகவலை தெரிவித்தது தெரிந்தது. இதனால் வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதுகுறித்து தீயணைப்புவீரர்கள் கூறுகையில், பொதுமக்களின் சேவைக்காக பணியாற்றி வருகிறோம். சிலர் பொய்யான தகவல் கூறுவதால் வீணாக அலைய வேண்டியதுள்ளது. அந்த நேரத்தில் மற்றொரு சம்பவம் நடக்கும் பட்சத்தில் பணியில் தடை ஏற்படும். ஆகவே இனிவரும் நாட்களில் யாரும் பொய்யான தகவல்களை கூற வேண்டாம். மீறினால் போலீசில் புகார் செய்யபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை