தகராறில் மீனவர் பலி 3 மீனவர்கள் கைது
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளியதில் ஒருவர் இறந்தார். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தொண்டி அருகே பாசிபட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் முத்துராஜா 35. மாற்று திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மளிகைக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செந்தில்குமார் 33, லாடையா 38, மாரிக்கண்ணு 46, ஆகியோர் மளிகைகடைக்கு முன்பு நின்று கொண்டு எங்களுடைய வலையை அறுத்துவிட்டார்கள் என்று தகராறில் ஈடுபட்டனர். மூவரும் சேர்ந்து முத்துராஜாவை கழுத்தை பிடித்து தள்ளினர். கீழே விழுந்ததில் முத்துராஜாவின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு முத்துராஜா இறந்தார். செந்தில்குமார், லாடையா, மாரிக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.---