உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

மீன்வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், 12 நாட்களுக்கு பின் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 24 முதல் வேலை நிறுத்தம் செய்தனர். தொடர்ந்து, 12 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரத்தில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மீன்கள் விலை உயர்ந்தது.இந்நிலையில், ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று, மார்ச் 8ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இதில், பெரும்பாலான படகுகளில் மாஉலா மீன், பாரை மீன், காரல் மீன்கள் உள்ளிட்ட பல ரக மீன்கள் ஏராளமாக சிக்கின. உரிய விலை, எதிர்பார்த்த வருவாய் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை