உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினம் தர்காவில் கொடி இறக்கம்

பெரியபட்டினம் தர்காவில் கொடி இறக்கம்

பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் உலக நன்மைக்கான மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது.பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களில் கோலாகலமாக நடந்தது.புனித மக்பராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு வாசனை திரவியங்கள் தெளித்து மல்லிகை சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பெரியபட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவில் பங்கேற்றனர். நேற்று மாலை 6:00 மணிக்கு கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு விழா நிறைவடைந்தது. நெய் சோறு, சுண்டல், இனிப்பு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியபட்டினம் தர்கா சந்தனகூடு விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை