உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரம், : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்---1)தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில் மே 31 முதல் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்றஅமைப்பின் சார்பில் அரசு போட்டித்தேர்விற்கு தயராகும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு போட்டித்தேர்வுகளுக்கான நுால்கள், மாதாந்திரஇதழ்கள், நாளிதழ்கள் அடங்கிய நுாலகம் உள்ளது.தற்போது ஜூலை 13ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப்-1) தேர்விற்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 31 முதல்நடைபெற உள்ளது.போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விபரங்களுடன்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தை நேரில் அல்லது 80721 79557 என்ற அலைபேசிஎண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ