உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி

குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி

ராமநாதபுரம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்கூட்ட அரங்கில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் விஷ்ணுசந்திரன் துவக்கி வைத்து பேசியதாவது: குரூப்-4 போட்டித்தேர்வுக்கு காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வில் வென்ற அலுவலர்கள் இங்கு பயிற்சி அளிக்கின்றனர். ஒருமுறை தேர்ச்சி பெறவில்லை என்றாலும் மறுமுறை வெற்றிபெறலாம் என்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் சுந்தரலிங்கம், ராஜேஸ்வரிஉள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ