| ADDED : மே 16, 2024 06:24 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் த.மு.மு.க., மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம்ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து இலவச பொது, கண் மருத்துவ முகாம்ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.த.மு.மு.க., மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹான் தலைமைவகித்தார். நகராட்சி தலைவர் கார்மேகம் முகாமை துவக்கி வைத்தார். தெற்குதரவை ரசீப் என்ற சிறுவன், பாம்பன் பாத்திமா, முதுகுளத்துார் முகமது அலி, மண்டபம் அன்வர், தேவகோட்டை பர்வீன், ராமநாதபுரம் சின்னக்கடை அப்துல்லா ஆகியோருக்கு மருத்துவ உதவித்தொகை மாவட்டத்தலைவர் இப்ராஹிம் முன்னிலையில் வழங்கப்பட்டது.ரத்த சர்க்கரை அளவு, கால் நரம்பு பரிசோதனை, கால் ரத்த குழாய் பரிசோதனை, உணவு ஆலோசனை, உடற்பயிற்சிஆலோசனை, மருத்துவ ஆலோசனை, கண் மருத்துவ பரிசோதனை நடந்தது.