உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ்குமார் -- உமா. இந்த தம்பதியின் மகள் ரோஷிகா, 5, ராமநாதபுரம் தனியார் பள்ளி யூ.கே.ஜி., மாணவி.கோடை விடுமுறைக்காக கண்ணார்பட்டி உறவினர் வீட்டுக்கு ரோஷிகா வந்துள்ளார். அங்குள்ள ஊருணியில் உறவினருடன் ரோஷிகா குளிக்கச் சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வீரர்கள், ரோஷிகாவை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர் ரோஷிகா இறந்து விட்டதை உறுதி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ