உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / யோகா போட்டியில் தங்கம்; பரமக்குடி மாணவர் சாதனை

யோகா போட்டியில் தங்கம்; பரமக்குடி மாணவர் சாதனை

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளி மாணவர் மாருதிகுமரன், தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ், இந்திய யோகாசன பெடரேஷன், ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன், நேஷனல் ஸ்போர்ட்ஸ் புதுடில்லி இணைந்து நடத்திய 3 வது பசிபிக் ஏசியன் யோகா சாம்பியன்ஷிப் ஸ்போர்ட்ஸ் போட்டிகள் தாய்லாந்தில் மே 18, 19ல் நடந்தது. 6 நிலைகளில் நடந்த போட்டிகளில் தமிழக அணி சார்பில் 11- - 12 வயது பிரிவில் பங்கேற்ற பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் மாருதிகுமரன் முதலிடம் பெற்றார். இவரை ஆர்னவ் கடல் யோகா நிலையம் தலைமை பயிற்றுனர் யோகா ராஜ்குமார், பள்ளி செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை