மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி; டிரைவர்கள் அவதி
06-Feb-2025
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் அரசு பஸ்சில் முகப்பு கண்ணாடி உடைந்த நிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இயக்கப்படுகிறது.ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 55 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 40 பழைய பஸ்களும், 15 புதிய பஸ்களும் உள்ளன. இந்த பஸ்களுக்கு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் நான்கு ஆண்டுகளாக உதிரி பாகங்கள் வழங்காமல் உள்ளது. இதனால் பழைய பஸ்கள் சீரமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. தற்போது வந்த புதிய பஸ்களில் 7 'ஏ' வழித்தடத்தில் அரண்மனையிலிருந்து புதுமடத்திற்கு இயக்கப்படுகிறது.இந்த பஸ்சில் முகப்பு கண்ணாடி உடைந்துள்ளது. புதிய கண்ணாடி பொருத்தப்படாமல் கண்ணாடி உடைந்த பகுதியில் ஸ்டிக்கரை ஒட்டி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் ஓடிக்கொண்டிருக்கும் போது உடைந்த கண்ணாடி அதிர்வால் முழுவதுமாக நொறுங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி உடைந்தால் டிரைவர் உட்பட முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் காயமடையும் அபாயம் உள்ளது.இது போன்ற ஆபத்தான பயணத்தை தவிர்க்க உடனடியாக உடைந்த கண்ணாடியை மாற்றி பஸ்சை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
06-Feb-2025