உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  பெயர்ந்து விழும் கட்டடம் : நோயாளிகள் பீதி

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  பெயர்ந்து விழும் கட்டடம் : நோயாளிகள் பீதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பழைய கட்டடத்தில் மன நல வார்டு பகுதியில் கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பிரசவம், குழந்தைகள் நலப்பிரிவுக்கு தனியாக கட்டம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. பழைய கட்டடங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. பழைய கட்டடங்களில் இன்றும் ஆண், பெண்களுக்கான சிகிச்சை வார்டுகள், மன நல மருத்துவ வார்டு, எக்ஸ்ரே பிரிவுகள் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் மன நல வார்டுக்கு செல்லும் பகுதியில் கூரையில் கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. புற நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பழைய கட்டடத்திலும் கூரை பெயர்ந்து விழுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் நோயாளிகள் அச்சத்தில் தவிக்கின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழைய கட்டடங்களில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ