உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சோப்பு தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்

சோப்பு தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் பாடத்தில் செய்முறைப்படி வீட்டில் மாணவர்கள் சோப்பு தயாரித்துள்ளனர். இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அறிவியல் பாடத் திட்டத்தில் சோப்பு தயாரிக்கும் முறைகள் குறித்து பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து வீட்டில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சோடியம் ஹைட்ராக்சைடு, தேங்காய் எண்ணெய் நீர் கலந்து சோப்பு தயாரித்தனர்.தலைமையாசிரியர் கார்த்திகேயன் முன்னிலையில் மாணவர்கள் சோப்பு தயாரிப்பு அதன் விளக்கங்களையும் செயல்முறை மூலம் செய்து காட்டினார். சிறப்பாக சோப்பு தயாரித்த மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை