உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப் பள்ளி ஆசிரியர் கல்வி சுற்றுலா ஐந்து பேர் வெளிநாடுகளுக்கு பயணம்

அரசுப் பள்ளி ஆசிரியர் கல்வி சுற்றுலா ஐந்து பேர் வெளிநாடுகளுக்கு பயணம்

திருவாடானை : அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் நுாறு சதவீதம் கொண்டு சேர்ப்பது,ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ஆசிரியர்களின் கற்றல்மற்றும் கற்பித்தல் திறன்கள், மூன்று கட்டங்களாக பரிசோதனை செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெறும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறியதாவது:மாநில அளவில் 380 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 1 முதல் 55 வரை உள்ளவர்கள் தொழில் நுட்பம், கலாசாரத்தில் சிறந்து விளங்கும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மீதமுள்ள 325 ஆசிரியர்கள் நேற்று டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அனைவரும் மே 1ல் திரும்புகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மண்டபம் முகாம் வில்ஸ்கிரேஸ், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மஜீர்பர்வீன், கரைமேல் குடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளி ஜெனிபர், அரசு மேல்நிலைப்பள்ளி முதுகுளத்துார் ஆனந்தி, அரசு நடுநிலைப்பள்ளி கீழச்செல்வனுார் பிராங்லின் ரிச்சர்டு ஆகியோர் சென்றுஉள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி