உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ள அரசு மாணவர் விடுதி கட்டடம்

சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ள அரசு மாணவர் விடுதி கட்டடம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் மாணவர் விடுதி கட்டடம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் திருஇருதய மேல்நிலைப்பள்ளி அருகே அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக விடுதி கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது பராமரிப்பு பணி செய்யப்படாததால் கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து விரிசில் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மாணவர்களும் ஒருவித அச்சத்துடனே தங்கி படிக்கின்றனர். எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் விடுதி கட்டடத்தை பராமரிக்க கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ