நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (ஆக., 27ல்) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தலைமையில் நடக்கவுள்ளது. ராமநாதபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்து பயன் பெறலாம்.