உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதலுாரில் 10 எக்டேரில் நிலக்கடலை பயிர் சாகுபடி

முதலுாரில் 10 எக்டேரில் நிலக்கடலை பயிர் சாகுபடி

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் முதலுார் கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தில் 10 எக்டேரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டத்தில் முதலுார், பொட்டிதட்டி கிராமத்தில் நிலக்கடலை ஜி.ஜே.ஜி. 32 சான்று விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு 10 எக்டேரில் விதை பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி 110 நாட்கள் வயதுடைய நிலக்கடலை 50 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.ஏக்கருக்கு ஒரு டன் மகசூல் தரக்கூடியது. விதையை காய வைத்து வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து கொடுக்கப்படும் 35 கிலோ சாக்கில் கட்டி வைக்க வேண்டும். தொடர்ந்து முளைப்புத் திறன் பரிசோதனை செய்ய பரமக்குடி சான்று நிலையத்திற்கு அனுப்பப்படும்.இங்கிருந்து விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட உள்ளது என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார். துணை வேளாண் அலுவலர் வித்யாசாகர், உதவி விதை அலுவலர் கண்ணன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை