உயர்கல்வி வழி காட்டுதல் நிகழ்ச்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு உண்டான ஆர்வத்தையும், கற்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பிளஸ் 2 வகுப்பில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசு தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். மாணவிகளுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கூடுதல் எஸ்.பி., சுந்தரராஜ்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) மார்த்தாண்ட பூபதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாவதி, பெண்கள் நலன் மகப்பேறு மருத்துவர் ராசிகா பங்கேற்றனர். ––