உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஹிந்து முன்னணி விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பரமக்குடியில் ஹிந்து முன்னணி விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பரமக்குடி : பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் 49 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செப்.,7ல் பரமக்குடி ஹிந்து முன்னணி சார்பில், 31ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் 49 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் திருவிளக்கு வழிபாடு, உறியடித்தல், அன்னதானம் நடந்தது. நேற்று மாலை விநாயகர் சிலைகள் கிருஷ்ணா தியேட்டர் முன்பு வந்தடைந்தது. பின்னர் விசர்ஜன ஊர்வலத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்னசபாபதி, மாவட்ட பொருளாளர் ஆதித்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நகரத் தலைவர் குமரன் வரவேற்றார். தொடர்ந்து விநாயகர் சிலைகள் சின்ன கடை, காந்தி சிலை, ஐந்து முனை, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பெரிய பஜார் வழியாக பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறையை அடைந்தது.அங்கு வைகை ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கும் விழா நடந்தது. ஹிந்துமுன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை