பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி 2 ஆண்டுக்கு பின் இணைந்தனர்
திருவாடானை: இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி வட்ட சட்டப்பணிக் குழு முயற்சியால் ஒன்று சேர்ந்தனர். திருவாடானை அருகே மெய்யனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர் 39, நெய்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா 31. இருவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். 2023ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கணவனோடு சேர்ந்து வாழ சரண்யா விருப்பப்பட்டார். இது குறித்து திருவாடானை நீதிமன்றத்தில் உள்ள வட்ட சட்டப் பணி குழுவில் மனு அளித்தார். நீதிபதி மனிஷ்குமார் விசாரணை செய்தார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சேர்ந்து வாழ அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வதாக விருப்பம் தெரிவித்தனர்.