உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்றுத்திறனாளி மனைவியின் வாகனத்தை எரித்த கணவர்

மாற்றுத்திறனாளி மனைவியின் வாகனத்தை எரித்த கணவர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பேராவூர பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி மனைவியை மது அருந்த பணம் தராததால் வாகனத்தை எரித்த கணவர் மீது வழக்குப் பதிந்தனர்.ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ் 43. இவரது மனைவி தீர்க்கதர்ஷினி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.தீர்க்கதர்ஷினி மாற்றுத்திறனாளி. இவர் பேராவூர் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் ஆட்டோ ஓட்டி வருகிறார்.ரமேஷ் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வந்து மனைவி தீர்க்கதர்ஷினியிடம் பணம் கேட்டு தொந்தரது செய்து வந்துள்ளார்.இதனால் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த தீர்க்கதர்ஷினி அவரை பிரிந்து பேராவூர் மேற்கு தெருவில் குழந்தைகுளுடன் தனியாக குடியிருந்து வந்தார். அங்கும் சென்ற ரமேஷ் தனக்கு பணம் கொடுக்காததால் தீர்க்கதர்ஷினிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது மாற்றுத்திறனாளி வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.இது குறித்து கேணிக்கரை போலீசில் தீர்க்கதர்ஷினி புகாரில் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை