| ADDED : ஜூன் 07, 2024 05:08 AM
ராமநாதபுரம்: அச்சம் தவிர்த்து பெயரளவில் படிக்காமல் ஒரு முறைக்கு இருமுறை மனதை ஒருநிலைப்படுத்தி புரிந்து படித்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம்என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் சாதித்த மாணவிகள் கூறினர். புரியாத பாடத்தை தயக்கமின்றி கேட்பேன்
என்.பார்கவி, மாவட்ட அரசு மாடல் பள்ளி, ராமநாதபுரம்: பிளஸ் 2 பொதுத்தேர்வில்600க்கு 555 மதிப்பெண்கள் பெற்றேன். சிறுவயது முதல் டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டேன். தனியார் மையத்திலும் பயிற்சி பெற்றேன். புரியாத பாடங்களை தயக்கம் இல்லாமல் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.மாதிரி தேர்வுகளில் தவறாமல் கலந்து கொண்டேன். வெளியே தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்றதால் நீட் தேர்வில்558 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. பெயர்அளவில் படிக்காமல் ஒருமுறைக்கு இருமுறை புரிந்து நீட் தேர்விற்கு என தனியாக நேரம் ஒதுக்கி படித்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்றார். அச்சம் தவிர்த்தால்வெற்றி நிச்சயம்
எம்.பிரதிபா, மாவட்ட அரசு மாடல் பள்ளி, ராமநாதபுரம்:பத்தாம் வகுப்பு கொரோனா காலக்கட்டம்என்பதால் மதிப்பெண் இல்லை. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 582 மதிப்பெண் பெற்றுள்ளேன். அரசு மாடல் பள்ளி என்பதால் நீட் தேர்விற்கு தயாராவது எப்படி என தொடர்ந்து பல்வேறு கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தினர். பிளஸ் 1, பிளஸ்-2 பாடங்களில் இருந்து கேள்விகள் வருகிறது. புரிந்து படித்தால் மட்டும் போதாது. சில கேள்விகளை கட்டாயம் மனப்பாடம் செய்ய வேண்டும். இந்த முறையில் படித்ததால் நீட் தேர்வில் 720க்கு 528 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நீட் தேர்வு என்றாலே ஒருவித அச்சம் மாணவர்களிடம் உள்ளது. அதனை தவிர்த்தால் நீட் தேர்வில் நிறைய மதிப்பெண்கள்பெற்று சாதிக்கலாம் என்றார்.