உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கு ஊதி அரை நிர்வாண போராட்டம்

ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கு ஊதி அரை நிர்வாண போராட்டம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகராட்சி முன்பு அ.தி.மு.க., கவுன்சிலர் தெருவில் மின் விளக்கு அமைத்திடக் கோரி அரை நிர்வாணத்துடன் சங்கு ஊதி போராட்டம் செய்தார்.ராமேஸ்வரம் நகராட்சி 2-வது வார்டில் உள்ள ஸ்ரீராம் நகர், லட்சுமி நகர், காட்டு பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் நகரில் மின் விளக்குகள் இன்றி மக்கள் இருளில் தவிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து நேற்று கவுன்சிலர் பிரபாகரன் அரை நிர்வாணத்துடன் நகராட்சி அலுவலகம் முன்பு சங்கு ஊதி போராட்டம் செய்தார்.பிரபாகரன் கூறுகையில், நகராட்சி தலைவர் வார்டுக்கு மட்டும் ரூ.12 லட்சம் மின்வாரியத்திற்கு செலுத்தி மின் இணைப்பு கொடுத்து தெருவிளக்கு அமைக்க உள்ளனர். 2ம் கட்டமாக புது ரோடு, ராமகிருஷ்ணபுரத்திற்கு திட்ட மதிப்பீடு செய்துள்ளனர். எனது வார்டை முற்றிலும் புறக்கணிக்கின்றனர் என்றார்.நகராட்சி தலைவர் நாசர்கான் கூறுகையில், அனைத்து வார்டுகளிலும் புதிய மின்விளக்குகள் அமைக்க மின்வாரியத்திற்கு ரூ.12.40 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதிய மின் விளக்குகள் அமைய உள்ளது. இதுகுறித்து கவுன்சிலர் பிரபாகரனிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் விளம்பரத்திற்காக போராட்டம் செய்கிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி