உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம் குறைகளை கொட்டினர்

பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம் குறைகளை கொட்டினர்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள குறைகளைக் கொட்டி தீர்த்ததால் காரசார விவாதம் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணா, கமிஷனர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். மேலாளர் தங்கராஜ் வரவேற்று மன்ற பொருட்களை வாசித்தார். 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசுகையில், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் தெருக்களில் குப்பை தேங்குவதுடன், வாறுகால்கள் அள்ளப்படாமல் சுகாதாரக் கேடாக இருக்கிறது.பல்வேறு பகுதிகளில் சிமென்ட் குடிநீர் தொட்டி உடைந்துள்ள நிலையில் ஆழ்குழாய் மோட்டார்கள் பயன்பாடின்றி உள்ளது. மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க மேல்நிலை குடிநீர் தொட்டிகள் தேவை.பல தெருக்களில் இன்னும் ரோடு வசதி செய்யப்படவில்லை. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தல், தெருக்களில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. சுகாதார வளாகங்கள் இருந்தும் பயன்பாட்டில் இல்லை. வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்கிறது, என பேசினர்.தலைவர் சேதுகருணாநிதி பேசுகையில், நாய்களுக்கு கு.க., செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் ஆழ்குழாய்கள் மற்றும் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படும். வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இரண்டு ஓரங்களிலும் பெரியளவில் குழாய்கள்அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.சுகாதார அலுவலர் ஜெயராமன், இன்ஜினியர் சுரேஷ்பாபு, குடிநீர் பிரிவு பேச்சியம்மாள், வருவாய் ஆய்வாளர் நாகநாதன், சத்துண உதவியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை