உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள் பெருந்தலை ஆமை அதிகரிப்பு

கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள் பெருந்தலை ஆமை அதிகரிப்பு

கீழக்கரை: கீழக்கரை மற்றும் துாத்துக்குடி மன்னார் வளைகுடா வனச்சரகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிக்க வைத்து அவை பாதுகாப்பாக கடலில் விடப்படுகிறது.இந்த ஆண்டு கீழக்கரை வனச்சரகம் சார்பில் அடஞ்சேரி, வாலிநோக்கம் பம்பு ஹவுஸ், சீலா மீன் பாடு ஆகிய மூன்று இடங்களில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டது. ஆலிவர்ட்லி என்றழைக்கப்படும் பெருந்தலை ஆமை அதிகளவில் மன்னார் வளைகுடா கடலில் காணப்படுகிறது. இவை டிச., ஜன., மாதங்களில் இனப்பெருக்கம் செய்வதற்காக கடலோரப் பகுதிகளில் உள்ள மணற்பங்கான பகுதிகளை தேர்வு செய்து அவற்றில் குழி தோண்டி முட்டையிட்டு மீண்டும் கடலுக்குள் செல்கின்றன. அவற்றை வனச்சரக அலுவலகத்தினர் எடுத்து ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் இரண்டடி ஆழத்திற்கு குழி தோண்டி முட்டையை மூடி வைக்கின்றனர்.நடப்பு ஆண்டு 2000 முட்டைகளுக்கும் அதிகமாக சேகரிக்கப்பட்டுள்ளது. 48 முதல் 58 நாட்கள் கழித்து முட்டையில் இருந்து வெளிவந்த 105 ஆமைக்குஞ்சுகளை பாதுகாப்பாக மன்னார் வளைகுடா கடலில் விட்டனர். இதே போல் துாத்துக்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாயல்குடி அருகே மேலமுந்தல், கீழமுந்தல், வாலிநோக்கம் மணல் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களிலும் குஞ்சு பொரிப்பகங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், துாத்துக்குடி வனச்சரக அலுவலர் ஜினோ பிரான்சிஸ் உள்ளிட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ