உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி அரசு கலைக் கல்லுாரி எதிரில் உடைப்பெடுத்து ஓடும் காவிரி நீர் நீரை திருடும் கும்பல் அதிகரிப்பு

கடலாடி அரசு கலைக் கல்லுாரி எதிரில் உடைப்பெடுத்து ஓடும் காவிரி நீர் நீரை திருடும் கும்பல் அதிகரிப்பு

கடலாடி: கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரி முன்பு கடந்த நான்கு நாட்களாக குழாய் உடைக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் காவிரி குடிநீரால் அப்பகுதி விளை நிலங்கள் மூழ்கியுள்ளது.கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடலாடியில் இருந்து கடுகுசத்திரம் வழியாக செல்லும் பிரதான காவிரி குழாயை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் இரவு, பகலாக வெளியேறுகிறது.கல்லுாரி மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் வசதி இல்லாததால் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர்.மாணவர்கள் கூறியதாவது: கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக கல்லுாரியில் குடிநீர் வசதி இல்லை. காவிரி இணைப்பு குழாயை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இரவு நேரங்களில் மோட்டார் மூலம் குழாய் வைத்து டேங்கர்களில் தண்ணீர் திருடும் கும்பல் அதிகரித்துள்ளது.குளம்போல் தேங்கியுள்ள காவிரி நீரை கட்டுமானப் பணிகள், கரிமூட்டம் போடுதல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக விற்பனை செய்கின்றனர். எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் சேதமடைந்து நாள் கணக்கில் வீணாகும் தண்ணீரை அடைத்து பழுது நீக்கி முறையாக கல்லுாரிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை