உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓட்டல், டீ கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவது அதிகரிப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

ஓட்டல், டீ கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவது அதிகரிப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

கீழக்கரை : கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உணவு பயன்பாட்டிற்கான பொருட்களில் அதிகளவு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.எனவே இவற்றை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிழக்கரை அருகே காஞ்சிரங்குடியை சேர்ந்த பசுமை தாயகம் பொறுப்பாளர் மதுரை வீரன் கூறியதாவது:பெருவாரியான ஓட்டல்களில் காலை டிபன், மதியம் உணவு மற்றும் இரவு நேர டிபன் கடைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் வழுவழுப்பு தன்மை கொண்ட தாள்களை பயன்படுத்துகின்றனர். டீ, காபி உள்ளிட்டவைகளை பார்சல்களாக பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி கொடுப்பது தொடர்கிறது. இதனால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மண்ணிற்கு கேடு விளைவிக்கிறது. பெரும்பாலான இடங்களில் மக்காமல் குப்பையாக உள்ளது. ஓட்டல்களில் உணவு பண்டத்திற்கு முறையாக உணவு கட்டணம் வசூலிக்கும் நிலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இயற்கையான வாழை இலைகளை பயன்படுத்துவதற்கு தயங்குகின்றனர். எனவே உணவு கலப்பட தடுப்பு பிரிவு துறையினர் இவ்விஷயத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ