உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாய் கரை வழியாக ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

பெரிய கண்மாய் கரை வழியாக ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரை வழியாக பாசன மடைகளுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 20 கி.மீ., நீளம் உள்ளது. ஒரு கி.மீ.,க்கு ஒரு பாசன மடை வீதம் மொத்தம் 20 பாசன மடைகள் அமைந்துள்ளன. இந்த பாசன மடைகள் மூலம் விவசாயிகள் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.விவசாயிகள் மழைக்காலங்களிலும் பாசனம் மடைகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் பராமரிப்பின் போது கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டு கரை பகுதியில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு கிராவல் ரோடு அமைக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் அனைத்து பாசன மடைகளுக்கும் எளிதாக சென்று வரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது ரோட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் பாசன மடைகளுக்கு செல்லும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை