உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருந்துக்கடைகளில் கண்காணிப்பு  கேமரா பொருத்துவது அவசியம்

மருந்துக்கடைகளில் கண்காணிப்பு  கேமரா பொருத்துவது அவசியம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்துகடைகளில் கட்டாயம் கண்காணிப்புகேமரா பொருத்த வேண்டும் என கலெக்டர்விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள்சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் மே 30ல் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்டறியப்படும் கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ