உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐ.டி.ஐ.,மாணவர் ரத்ததான முகாம்

ஐ.டி.ஐ.,மாணவர் ரத்ததான முகாம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. தலைமை டாக்டர் நாகரஞ்சித் தலைமை வகித்தார். வட்டார டாக்டர் திவான் முகைதீன் முன்னிலை வகித்தார். அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் 40 பேர் ரத்த தானம் செய்தனர். பெறப்பட்ட ரத்தம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. உடன் செவிலியர்கள், பேராசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ