| ADDED : ஆக 12, 2024 05:21 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.ராமநாதபுரம் மேல் மருவத்துார் ஆதிபராசக்தி மன்றத்தின் சார்பில், ஆர்.ஆர்.சேதுபதி நகரில் செவ்வாடை பக்தர்கள் நேற்று மாலை ஆடி மாதத்தினை முன்னிட்டும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கஞ்சி கலய ஊர்வலம் நடத்தினர். ஆர்.ஆர்.சேதுபதி நகரில் இருந்து ஊர்வலத்தினை ராணி லட்சுமி நாச்சியார் துவங்கி வைத்தார்.ஊர்வலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சாலை தெரு, அரண்மனை, மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆர்.ஆர்.சேதுபதி நகரை வந்தடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக அமைதிக்காக, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 508 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.குருசக்தி வழிவிட்டாள் தலைமை வகித்தார். பசும்பொன் சக்தி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி, கஞ்சி கலயம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தனர். இந்தாண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க பக்தர்கள் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.