| ADDED : ஜூலை 23, 2024 04:56 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் இசக்கி ராஜா, பிளஸ் 2 மாணவர் முகமதுஅஸ்பாக் ஆகியோர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று போட்டிக்கு தேர்வாகினர்.இந்நிலையில் மாநிலப் போட்டிக்கு தேர்வாகி பள்ளிக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் அயூப் கான், ஜெயக்குமார், பகுர்தீன், பரக்கத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.