உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பு உற்பத்தியில் தொழிலாளர் ஆர்வம்

உப்பு உற்பத்தியில் தொழிலாளர் ஆர்வம்

தேவிபட்டினம் : சுட்டெரிக்கும் வெயிலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மாவட்டத்தில் தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவுப் பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு உலர்த்துதல் மற்றும் தோல் பதனிடுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர்.மழை காரணமாக அக்., முதல் பிப்., வரை மாவட்டத்தில் உப்பு உற்பத்தியை தொழிலாளர்கள் நிறுத்தியதுடன், உப்பள பாத்திகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளனர்.இதற்காக தொழிலாளர்கள் பாத்திகளில் நீரை நிரப்பி உப்பு உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை