உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயில் மாசிக் களரி விழா நடந்தது. தினந்தோறும் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் முக்கிய வீதிகளில் பால்குடம், வேல்குத்தி சக்தி கரகத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்தனர். நிறைவு நாளில் 508 விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கமுதி தனி ஆயுதப்படை போலீசார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை