உள்ளூர் செய்திகள்

சட்ட விழிப்புணர்வு

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு அறிவுறுத்தலின் படி பரமக்குடி வட்ட சட்டப் பணிக் குழு தலைவர் சார்பு நீதிபதி சதீஷ் உத்தரவின் பேரில் வெங்கிட்டான்குறிச்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வக்கீல் ராஜ்குமார் பங்கேற்று 100 நாள் வேலை திட்ட பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது வேலை செய்யும் இடத்தில் உழைப்பாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்தும் விளக்கினார். சட்ட தன்னார்வலர் முருகேசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை