உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழச்செல்வனுாரில் மகா சண்டி ஹோமம்

கீழச்செல்வனுாரில் மகா சண்டி ஹோமம்

சிக்கல்: சிக்கல் அருகே கீழச்செல்வனுாரில் உள்ள பூரண புஷ்கலா பொற்கொடி அம்பிகை சமேத பிரமாண்ட அய்யனார்,காமாட்சியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது.மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகம் முன்புறம் குண்டம் அமைக்கப்பட்டு அவற்றில் வேத மந்திரங்கள் முழங்க சண்டி ஹோமம் நடந்தது. கன்னிகா பூஜை, கோபூஜை, ஹோம கலச பூஜை, மண்டப பூஜை, வேதிகார்ச்சனை உள்ளிட்ட சங்கல்ப பூஜைகள் நடந்தது.ஏராளமான சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ