உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் ஜூலை 9ல் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

உத்தரகோசமங்கையில் ஜூலை 9ல் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் அக்னி தீர்த்த தெப்பக்குளம் அருகே தனி சன்னதியில் மாணிக்கவாசகர் வீற்றிருக்கிறார்.ஒவ்வொரு ஆண்டும் மாணிக்கவாசகர் குருபூஜை ஆனி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகப் பெருமான். இறைவனுக்கு அடிமையாக இருந்து தொண்டாற்றினால் இறைவனே நேரில் வந்து அருள்வான் என்பதை உலக மக்களுக்கு உணர்த்துவது மாணிக்கவாசகரின் வரலாறாக உள்ளது.இத்தகைய சிறப்புகளைப் பெற்ற மாணிக்கவாசகருக்கு ஜூலை 9 காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை அபிஷேக அலங்கார தீபாராதனைகள், பாராயணம், நாமாவளி அவர் இயற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் ராமநாதபுரம் லட்சுமிபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா மந்திர் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ