உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாளையடிக்கோட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு

தாளையடிக்கோட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு

நயினார்கோவில்:பரமக்குடி அருகே நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவையொட்டி தாளையடிக்கோட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது.நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயிலில் கடந்த 10 நாட்களாக சித்திரை பொங்கல் விழா நடந்தது. இதனை ஒட்டி நேற்று நயினார்கோவில் ஒன்றியம் தாளையடிக்கோட்டை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 23 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 காளையர்கள் வீதம் ஒவ்வொரு அணிகளாக களம் இறக்கப்பட்டனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் ராஜா நாகேந்திரசேதுபதி கலந்து கொண்டார். நயினார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாதன் குரூப்ஸ் உரிமையாளர் கணேசன் அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை