உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனநல மருத்துவமனையில் நினைவஞ்சலி கூட்டம்

மனநல மருத்துவமனையில் நினைவஞ்சலி கூட்டம்

கீழக்கரை: -ஏர்வாடி தர்கா பகுதியில் இயங்கி வந்த தனியார் மனநல காப்பகத்தில் கடந்த 2001ல் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மன நோயாளிகள் உடல் கருகி இறந்தனர். அவர்களின் 23-வது ஆண்டு நினைவு அனுசரிப்பு கூட்டம் நடந்தது.ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் வில்லியம்ஸ் தலைமை வகித்தார். காப்பகத்தின் மேலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். சமூகப் பணியாளர் லுாகாஸ், செவிலியர் நிரோஷா உட்பட பலர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை