உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உச்சிப்புளி அருகே இருமேனியில் தொடர் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கனிமவளத் துறையினர்

உச்சிப்புளி அருகே இருமேனியில் தொடர் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கனிமவளத் துறையினர்

உச்சிப்புளி, : உச்சிப்புளி அருகே இருமேனி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு பகுதியில் உள்ள பட்டாணி அப்பா தர்கா அருகே மணற்பாங்கான பகுதிகள் அதிகம் உள்ளது.இதன் அருகே ஏராளமான பனை மரங்களும் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இப்பகுதிகளில் டிராக்டர்களில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையை நடந்து வருகிறது.பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மணல் கொள்ளை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இருமேனி எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவ்வர்ஷா கூறியதாவது:இருமேனி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டாணி அப்பா தர்கா அருகில் உள்ள நிலங்களில் மர்ம நபர்கள் டிராக்டர்களில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் அரசுக்கு புகார் மனு அனுப்பி வருகிறோம்.இருப்பினும் மணல் கொள்ளை நடப்பது தொடரவே செய்கிறது. வருவாய்த்துறையினர், கனிமவளத் துறையினர், போலீசார் ஒன்றிணைந்து மணற்பாங்கான பகுதிகளில் நடக்கும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இதே நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விடும். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ