உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் ரோட்டோரம் குவிந்த மணல்  விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ராமேஸ்வரம் ரோட்டோரம் குவிந்த மணல்  விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகே மணல் தேங்கியுள்ளதால் விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது. பாரதி நகர், குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப் பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி. இங்கு ரோட்டில் பாதியளவு மணல் தேங்கியுள்ளது. மணலில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது.தொடர்ந்து வாகனப்போக்குவரத்து இருப்பதால் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. நெடுஞ்சாலை நிர்வாகத்தினர் ரோட்டில் உள்ள மணலை அப்புறப்படுத்தி விபத்துக்கள் நடக்கமால் தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ