உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாகநாத சுவாமி அம்மன் வீதி உலா; வசந்த விழா கோலாகலம்

நாகநாத சுவாமி அம்மன் வீதி உலா; வசந்த விழா கோலாகலம்

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவ விழா நடக்கிறது. மே 13ல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.தினமும் நாகநாத சுவாமி பிரியாவிடையுடனும், சவுந்தர்ய நாயகி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் இந்திர விமானம், நந்திகேஸ்வரர், பூதம், சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். மே 21 காலை தேரோட்டம் நடக்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ