| ADDED : ஆக 03, 2024 04:44 AM
திருப்புல்லாணி: புதிய பாரதம் எழுத்தறிவு இயக்கம் 2024 -25ம் ஆண்டிற்கான வட்டார அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் தலைமை வகித்தார். திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, ஜெயா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி, ஆசிரியர் கருத்தாளர்கள் செல்வகுமார், சித்ராதேவி மற்றும் பயிற்றுநர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.பரமக்குடி, போகலுார், திருப்புல்லாணி, மண்டபம் வட்டாரங்களில் உள்ள மையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் குடியிருப்பு வாரியாக அமைக்கப்பட்டு அதன் மூலம் 3623 கற்போருக்கான அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு, வாசித்தல், திறன் மேம்பாடு வழங்க தன்னார்வர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.வட்டார அளவில் நடந்த பயிற்சி முகாமில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.