அடிப்படைக் கட்டமைப்பு இன்றி திருப்புல்லாணி மக்கள் அவதி; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் முறையாக குப்பை அள்ளுவது இல்லை. குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படைக் கட்டமைப்பு இன்றி உள்ளதால் கிராம மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.சேதுக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களாக உடைத்து வெளியேறி வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றினை சரி செய்கின்றனர்.ஊராட்சி தலைவர்களுக்கான பதவி காலம் முடிவடைந்த நிலையில் பல கிராமங்களில் உடனுக்குடன் குப்பை அகற்றாமல் தேக்கமாக வைத்து பின்னர் தனி அலுவலரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அள்ளுகின்றனர். இதனால் நாள்பட்ட குப்பையில் இருந்து சுகாதாரக் கேடு நிலவி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளை சந்திக்கின்றனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.எனவே ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், குப்பை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உடனுக்குடன் மேம்படுத்திட தனி அலுவலர்கள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.