| ADDED : ஜூலை 11, 2024 04:59 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் திடக்கழிவு நீரைமுழுமையாக வெளியேற்றுவது இல்லை.மாறாக காலி பிளாட்டுகள்,மழைநீர் செல்லும் கால்வாய்கள் கழிவுநீர் தேங்கும் மெகாசெப்டிக் டாங்க் ஆக மாறியுள்ளது. கொசுத்தொல்லை,துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை ஏனோஅதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அருகேயுள்ள சக்கரகோட்டை,பட்டணம்காத்தான் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைஎன்பது பெயரளவில் உள்ளது. இதனால் மேற்கண்ட இடங்களில்தாழ்வாக உள்ள காலி இடங்களில் கழிவுநீர் குளம் போல தேங்கிகிடக்கிறது.குறிப்பாக மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்கள்பராமரிக்கப்படாமல் கழிவுநீர் தேங்கியுள்ளது.சக்கர கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளில் குறிப்பாக கலெக்டர் அலுவலகம் அருகே ஆயுதப்படைமைதானம் அருகே காலி இடத்தில் கழிவுநீரைகொட்டுகின்றனர். அத்துடன் தற்போது மழை நீரும் கலந்துதுர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்திமையமாகியுள்ளது.இதே போல சக்கரகோட்டையில் உள்ளசோத்துாருணி குப்பை, கழிவு நீரால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. அதே சமயம் ஆட்டோ, டூவீலர்கள், நடந்து செல்பவர்கள், ரோட்டோரங்களில் வியாபாரம் செய்வர்கள் துர்நாற்றத்தால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.இதனால் நோய்தொற்று அபாயம் உள்ளது. கண்டுகொள்ளாதஅதிகாரிகள்
இந்த வழியாக தினமும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் காரில் செல்லும் நிலையில் துர்நாற்றம் தெரிவது இல்லை. குளம்போல கழிவுநீர் தேங்கியுள்ளதை பார்த்தும் பார்க்காதது போல உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.எனவே ஊருணிகள், வாய்க்கால், காலிபிளாட்களில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும்,திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.