உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: 3 பேர் தலைமறைவு

ராமநாதபுரத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: 3 பேர் தலைமறைவு

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய ரேஷன் அரிசியை 2 லாரிகளுடன் சிலர் கடத்தி சென்றனர். இதில் லாரியுடன் அரிசியை மீட்டு லாரி டிரைவர் சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்து, மேலும் 3 பேரை தேடுகின்றனர்.ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு ரயிலில் 21 பெட்டிகளில் 26 ஆயிரத்து 344 டன் அரிசி ஆக.,30ல் வந்தது. இதனை லாரிகளில் ஏற்றி நுகர் பொருள் வாணிப கிடங்குக்கு எடை போட்டு எடுத்து செல்லும் பணியின்போது மின் தடை ஏற்பட்டது. இதனால் 10 லாரிகளில் ஏற்றிய அரிசி லோடு எடை போடமுடியமால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.இதில் இரு லாரிகளில் 50 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றுவிட்டதாக ஒப்பந்ததாரர் ரவி புகாரில் லாரி டிரைவர் சாயல்குடி அருகே நரிப்பையூரை சேர்ந்த சண்முகசுந்தரத்தை 31, கைது செய்து ராமநாதபுரம் போலீசார் விசாரித்தனர்.இரு லோடு ரேஷன் அரிசியையும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ள கோடவுனில் இறக்கிவிட்டு லாரியை துாத்துக்குடி பகுதிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. ரேஷன் அரிசியையும், லாரியையும் மீட்ட போலீசார் லாரி உரிமையாளர், மற்றொரு டிரைவர் உட்பட 3 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை